
சென்னை இலக்கியத் திருவிழாவில் நிறைய அரங்குகளை நானும் எழுத்தாளர் அகரமுதல்வனுமாய் வழிநடத்தினோம். நெல்லை, கோவை, தஞ்சை, சென்னை என வெவ்வேறு மாவட்டங்களில் பெரும் இலக்கியத் திருவிழாக்களை ஒரு மாநில அரசு நடத்தியதென்பது மிக முக்கியமான செயல்பாடு. 2010 ம் வருடம் துவங்கி பெருநிகழ்வுகளை ஒருங்கிணைத்த அனுபவம் எனக்கிருந்தாலும் இந்த மூன்றுநாள் விழாவில் புதியதாக நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. வெறுமனே ஒரு எழுத்தாளரை அறிமுகப்படுத்திவிட்டு ஒதுங்கிக் கொள்ளாமல் அந்த அமர்வை வழிநடத்துவதற்கு பார்வையாளர்களையும் படைப்பாளிகளையும் ஒரு புள்ளியில் இணைக்கும் வேலையை கவனமாக கையாளவேண்டும். அதிலும் பெரும்பகுதி ஆட்கள் புதிதாக இலக்கிய விழாக்களுக்கு வருகிறவர்கள் என்பதால் அரங்கில் எந்தவிதமான சலசலப்புகளும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியமானது. அந்த வகையில் வெற்றிகரமாக நாங்கள் வழிநடத்தினோம் என்றுதான் சொல்லவேண்டும்.
மூன்றுநாள் நிகழ்வுகளில் ஒரு அமர்வுக்காக இயக்குநர் வெற்றிமாறனை நேர்காண வேண்டிய பொறுப்பு எனக்களிக்கப்பட்டது. குறைந்த அவகாசத்தில் சிறப்பாக நிகழ்ந்த உரையாடல் அது....
உரையாடலைக் கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்.
https://www.youtube.com/watch?v=6XkWfp5_hvw