top of page

ஒரு கடிதம்

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • Sep 20, 2023
  • 1 min read



எழுத்தாளர் லஷ்மி சரணக்குமார்க்கு வணக்கம்... ”அடக்குமுறையின் மாமிசத்தைப் பிய்த்துத் துப்பும் கதைகள்” கட்டுரையை வாசித்தேன். மாமிசம் தொகுப்பை பேரறிவாளன் அண்ணோடு கொஞ்ச நாள் இருந்தபோது அற்புதம்மாள் எனக்கு கொடுத்தாங்க,நான் ஆசீர்வாதங்களை நம்புபவன் எனக்கு அதுவொரு ஆசீர்வாதம். மாமிசம் எனக்கு பிடித்த தொகுப்புகளில் ஒன்று மொழிபெயர்ப்பு சிக்கல் (எனக்கு) இருந்திருக்கிறது... ஆனால் நண்பர்களுடனான பொது விவாதங்களில் எப்படியேனும் இதிலிருந்து ஒரு கதையை மேற்கொள் காட்டி இருக்கிறேன் கொஞ்ச காலம் அப்படினா பாதிப்பை தரும் கதைகள் கொண்டவை அந்த தொகுப்பு. தங்குவதற்கு சரியான கூரை இல்லாத நகரோடியாக அம்மாவிடம் நல்லா...இருக்கே... என்று,சொல்லும் எனக்கு தொகுப்பிலுள்ள புகைப்படம் எனும் கதை ஆதீத அக தொடர்புடைய ஒன்று. நான் அறிந்த வரையில் இந்த தொகுப்புக்கான senseful text தமிழில் வந்ததில்லை. அதற்கு பெரும்பான்மையான காரணம் இலக்கிய சழக்காளர்களின் அரசியலே,ஒருநாள் விளையாட்டு தனமாக நானே ஒரு மதிப்பு கட்டுரை எழுதி பார்த்தேன் நானே படித்து விட்டு ஓரமாக வைத்தேன்,இன்றளவும் அந்த ஏக்கம் எனக்கு உண்டு அதை உங்களின் இந்த கட்டுரை மாற்றியிருப்பதாக் உணர்கிறேன். நன்றி -அன்பு ஹனீஃபா. அன்புள்ள ஹனீஃபா


தோழர் ரவிக்குமாரின் நூலுக்கு நான் எழுதிய கட்டுரையானது இந்திய டுடே இதழுக்காக எழுதியது. பத்து வருடங்கள் இருக்கலாமென நினைவு. தமிழில் வந்த மொழிபெயர்ப்பு நூல்களில் மாமிசம் நூலுக்குத் தனித்துவமானதொரு இடமுண்டு. மாமிசம் என்ற ஒரு கதையை மட்டுமே எடுத்துக் கொண்டு உரையாடினாலும் ஏராளமான விவாதங்களை உருவாக்கக் கூடிய கதை அது. ரவிக்குமாரின் அரசியல் நூல்கள் கவனிக்கப்பட்ட அளவிற்கு அவரது பிற நூல்கள் கவனிக்கப்படவில்லை. உண்மையில் இதனால் இழப்பு அவருக்கல்ல. நல்ல படைப்புகள் காலஞ்சென்று கவனிக்கப்படும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு நல்ல பிரதி அதன் காலத்திலேயே வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டும்.


இந்திய இலக்கியம் என்னும் நூலில் கா.ந.சு ஒரு கட்டுரையில் இப்படி எழுதுகிறார். ‘என்னளவில் இன்றைக்கு இந்தியாவில் நல்ல சிறுகதை எழுத்தாளர்களே இல்லை. தமிழில் மட்டும் நான்கு சிறுகதை எழுத்தாளர்கள் சர்வதேச தரத்திற்கு உள்ளனர்.’ இந்த கறார்த்தன்மையை அவர் வந்தடைய அவர் நாற்பது வருடங்கள் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்க வேண்டியிருக்கிறது. டான் குயிக்‌ஷாட்டைப் படிப்பதற்காக ஸ்பானிஷையும், தாந்தேவை வாசிப்பதற்காக இத்தாலிய மொழியையும் கற்றுக்கொள்ளும் அளவிற்கு இலக்கியப் பித்துக் கொண்டவர் கா.ந.சு. இந்த பறந்த வாசிப்புதான் ஒருவரை நல்ல இலக்கியம் நோக்கி நகர்த்துகிறது. பெருங்குவியல்களிலிருந்து தரமானதைப் பிரித்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. நல்லனவற்றைத் தொடர்ந்து பேசவேண்டியதும் ஒரு எழுத்தாளனின் கடமைதான். சார்புகளைக் கடந்து ஒரு மொழியில் வரும் நல்ல பிரதிகளைக் குறித்து உரையாடக்கூடிய ஆரோக்கியமான சூழல் இன்னுமே தமிழில் வந்திருக்கவில்லை என்பது வருத்தம் தான்.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page