top of page

ஓடிடி படைப்புலகம் - ஓர் புரிதல்

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • Jul 26, 2023
  • 1 min read


இன்றைக்குத் திரைப்படத்துறையின் முகமென்பது திரையரங்கைத் தாண்டி பெரும்பகுதி ஓடிடி தளங்களையும் சார்ந்ததாக மாறியிருக்கிறது. உலகளாவிய திரைமொழியின் போக்கை மாற்றக்கூடிய இந்த ஊடகங்கள் இன்றைக்கு என்னவாக இருக்கின்றன, எதிர்காலத்தில் என்னவாக மாறக்கூடும் என்ற உரையாடல் முக்கியமானது. இயக்குநர்கள் திரைக்கதையாசிரியர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருமே இந்த ஓடிடி தளங்களுக்கான அடிப்படைகளையும் அவற்றின் போக்கினையும் புரிந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து எமது மோக்லி பதிப்பகம் விமலம் மெஸ்ஸுடன் இணைந்து கடந்த வருடம் சென்னையில் ஒரு நாள் முகாம் ஒன்றை நடத்தியது. தமிழில் இதற்காக நடத்தப்பட்ட முதல் முகாம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களுக்கான பயிற்சி பட்டறைகளுக்காக அஞ்சாயிரம் பத்தாயிரமென கட்டணங்கள் வசூலிக்கும் சூழலில் நாம் இலவசமாக இந்த பயிற்சி பட்டறையை தரமான பயிற்றுநர்களோடு நடத்தினோம். இயக்குநர்கள் மிஷ்கின் , மித்ரன், பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதையாசிரியர்கள் மணி எம் கே மணி, தமிழ்ப்ரபா ஒளிப்பதிவாளர் கிஷோர், தயாரிப்பாளர் ஆரபி உட்பட இன்றைக்குத் தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கிய ஆளுமைகள் ஏராளமானோர் கலந்துகொண்ட நிகழ்விது.


கீழே மிஷ்கினின் உரைக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=3Zp4drEHE4E

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page