top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

கு.அழகிரிசாமி நூற்றாண்டு விழா




தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் கு.அழகிரிசாமிக்கு தனித்துவமானதொரு இடமுண்டு. எந்தச் சிக்கலும் இல்லாமல் எளிமையான சம்பவங்களால் ஆனவை அவரது கதைகள். அடிப்படையில் மனிதனின் இயல்பான உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் அவரது கதைகள் பிரதிபலிப்பதால் அசாதாரணமான தருணங்கள் தன்னியல்பாக அந்தக் கதைகளுக்குள் வந்துவிடும். குழந்தைகளின் உலகை நுட்பமாய் அவரது கதைகள் சித்தரிப்பதாய் பொதுவாக சொல்லப்படுவதுண்டு. உண்மையில் அந்தக் குழந்தைகளின் உணர்வுகள் வெளிப்படும் பல இடங்களில் பெரியவர்களின் கையாலாகத்தனங்களும் இயலாமைகளும் அப்பட்டமாக வெளிப்படக் கூடியவை.

எனது துவக்ககால சிறுகதைகளில் கு.அழகிரிசாமியின் தாக்கம் அதிகமுண்டு. தடம் இதழில் எழுதிய சிறுகதையாளின் குறிப்புகள் கட்டுரைக்குக் கூட நான் அவரது ஒரு சிறுகதையின் தலைப்பையே தேர்ந்தெடுத்திருந்தேன். அந்த வகையில் எனது முன்னோடிகளில் ஒருவரான அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதை ஒரு கடமையாக நினைத்திருந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன் எமது மோக்லி பதிப்பகம் விமலம் மெஸ்ஸுடன் ஒருங்கிணைந்து கு.அழகிரிசாமி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை நடத்தியது.

எழுத்தாளர்கள் சுனில் கிருஷ்ணன், மண்குதிரை, பவா செல்லத்துரை உட்பட தமிழின் முக்கிய ஆளுமைகள் கலந்துகொண்ட அந்த நிகழ்வு மனதிற்கு நிறைவளித்த ஒன்று.


அந்த நிகழ்வில் எழுத்தாளர் மண்குதிரையின் உரை கீழுள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=jIxq_6u7OA0

13 views

Comentários


bottom of page