கானகன் வெளியாகி பத்து வருடங்கள் கடந்திருக்கின்றன. முதல் கதை எழுதப்பட்ட காலத்திலிருந்தே நான் கவனிக்கப்பட்ட ஒரு எழுத்தாளனாக இருந்திருந்த போதும் எல்லாத் தரப்பினருக்குமான ஒரு எழுத்தாளனாக என்னை எடுத்துச் சென்றது கானகன் தான். எனது நூல்கள் அதிக பதிப்புகளைக் கண்டதும் இந்த நாவல்தான். கானகன் நாவல் குறித்து ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. நிறைய மாணவர்கள் முதுகலை ஆய்விற்கு எடுத்து பட்டம் பெற்றுள்ளார்கள். பேராசிரியர் ந. இரத்தினகுமார் அவர்களின் இந்தக் கட்டுரை எனக்கு மிக விருப்பமான ஒன்று.
https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-june22/43970-2022-07-08-00-57-06
Comments