top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

சார்லஸ் பிரான்சன் – வன்முறையின் அடையாளம்.

கலைக்கும் வன்முறைக்குமான மெல்லிய தொடர்பு எல்லாக் காலத்திலும் வாழ்ந்த கலைஞர்களிடமும் காணக்கூடியதாகத்தான் இருக்கிறது. நமது இந்திய மரபில் கலையோடு சம்பந்தப்பட்டவன் சாந்த சொரூபி என்றொரு பொய்யான பிம்பம் எல்லோராலும் நம்பப்பட்டு வந்தாலும் உண்மை அதுவல்ல. இந்திய சினிமாக்கள் நாயகர்களின் புனித பிம்பம் கெட்டுவிடக் கூடாதென்பதில் அக்கறை கொண்டவை. உண்மை மனிதர்களின் கதையை படமாக்கினாலும் அவர்கள் பெரும்பாலும் நன்மையின் அடையாளங்களாகவே இருப்பார்கள். சமூகத்தின் எதிர்நிலையிலிருப்பவர்களைப் பிரதானப்படுத்தி சினிமா எடுப்பதோ கதை எழுதுவதோ சாத்தியப்படாத ஒன்று.

டாம் ஹார்டியின் பிரான்சன் என்ற படம் வாயிலாகவே சார்லஸ் பிரான்சனைக் குறித்துத் தெரிந்து கொண்டேன். 2008 ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஒரு தனிமனிதனின் வன்முறையும், அதை செய்வதற்கு அவன் சொல்லும் பிரதான காரணங்களும் படம் முடிந்த பிறகும்கூட புதிரானவையாய் இருந்தன. வன்முறை, சிறைவாழ்க்கை, மனநல மருத்துவமனை என அவரின் மொத்த வாழ்க்கையும் குருதி நிறைந்த பக்கங்களால் ஆனவை. அவரின் மீதான கவனம் ஏற்பட்டதற்கு காரணம் இதுவல்ல. அவருக்குள்ளிருக்கும் கலைவெளிப்பாடுதான். ஸ்பானிஷ் ஓவியரான சால்வடார் டாலியின் மீது கொண்ட ப்ரியத்தால் தனது பெயரை சார்லஸ் சால்வடர் பிரான்சன் என மாற்றியிருக்கிறார். இணையத்தில் காணக் கிடைக்கும் அவரது ஓவியங்களில் நவீன ஓவியத்திற்கான தனித்துவங்களைப் பார்க்க முடிகிறது.

எப்போதும் நம்மை மற்றவர்கள் கவனிக்க வேண்டுமென்கிற எண்ணம் ஒரு மனிதனை என்னவாக வேண்டுமானாலும் மாற்றும். இவரை பிரிட்டனின் அதீத வன்முறைகொண்ட சிறைக்கைதியாக மாற்றியுள்ளது. மைக்கேல் கோர்டான் பீட்டர்சன் என்னும் இயற்பெயரோடு 1952 ம் வருடம் லூட்டனில் பிறந்த அவர் 22 வயது வரையிலும் பகுதி நேரமாக ஏராளமான வேலைகளைப் பார்த்து வந்தாலும் பிரதான வேலை முன்பின் தெரியாத இடங்களில் வன்முறையை பிரயோகிப்பதும், அதற்காக கோர்ட்டில் குறைந்தபட்ச தண்டனையோ அல்லது எச்சரிக்கையோ பெற்று வருவதும்தான்.

முதல் முறையாக 22 வது வயதில் ஆயுதம் எடுத்துக்கொண்டு தபால் அலுவலகத்தில் திருடப் போனதற்காக 7 ஆண்டுகள் தண்டனை பெற்று வால்ட்டன் கோல் சிறைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு சக கைதிகளுடனும் காவலர்களுடன் சதாவும் மல்லுக்கட்டு. 1975 ம் வருடம் வேறு ஒரு சிறைக்கு இடம் மாற்றப்படும் பிரான்சன் வொர்க்‌ஷாப்பில் வேலை செய்ய மறுத்ததோடு அதிகாரியையும் உதைத்ததால் தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார். அடிக்கொரு தரம் இவரது புகைப்படத்தோடு செய்திகள் பத்திரிக்கைகளில் வர, அந்த செய்திகள் கொடுத்த பிரபல்யம் பிடித்துப்போய் முன்னை விடவும் தீவிரமாக வன்முறைகளில் ஈடுபடத் துவங்குகிறார். பிரிட்டனின் காஸ்ட்லியான கைதி என்றுதான் பத்திரிக்கைகள் இவரைக் குறிப்பிடுகின்றன. ஒரு மனிதன் வன்முறையை தனது அடையாளமாக எடுத்துக் கொள்ள பழகியபின் இழப்புகள் குறித்தோ வலிகளைக் குறித்தோ எந்தவிதமான அக்கறைகளும் கொள்வதில்லை. ப்ரான்சனின் இந்த வினோத மனநிலையைப் புரிந்து கொண்ட சிறை நிர்வாகம் அவரை மனநோயாளியென சில காலம் ரேம்ப்ட்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் வைத்திருந்தது.

189 views

Comments

bottom of page