கடந்த சில நாட்களுக்குமுன் முகநூலில் நாவல் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு ஒன்றை ஒருங்கிணைக்க இருப்பதாக எழுதியிருந்தேன். அதனைத் தொடர்ந்து நிறையபேர் முகநூலின் உள்பெட்டியில் எப்போது வகுப்புகள் துவங்கும் என கேட்டிருந்ததோடு இலங்கை வாழ் வாசகர்கள் சிலர் கட்டணங்கள் குறித்தும் ஆட்சேபனை தெரிவித்து இருந்தார்கள்.
இதன் பொருட்டு சில விடயங்களை விளக்கமாகவே எழுதலாமெனத் தோன்றுகிறது.
1. நாவல் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு நிச்சயமாக ஒருங்கிணைக்கப்படும். ஏற்கனவே சில வகுப்புகளை ஒருங்கிணைத்த அனுபவத்தில் இதனை உறுதியாகச் சொல்கிறேன்.
2. முழுமையான தயாரிப்புகளுக்கு சிறிய அவகாசம் தேவைப்படுவதால் வகுப்புகளை ஜனவரி இறுதி அல்லது ஃபிப்ரவரியில் துவங்குவதாகத் திட்டம்.
3. பயிற்சிக் கட்டணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு… இந்தக் கட்டணம் இன்றைக்கு சக தமிழ் எழுத்தாளர்கள் பயிற்சி கட்டணங்களுக்கு எவ்வளவு வசூலிக்கிறார்கள் என்பதை முழுமையாக விசாரித்து அறிந்தபின்பே இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இருந்தாலும் நிறையபேர் வகுப்பில் இணைவதில் சிரமம் இருப்பதன் காரணமாய் கட்டணம் குறைக்கப்படும்.
4. இந்த வகுப்புகள் வார இறுதி வகுப்புகளாக இணைய வழியில் இருக்கும். ஒவ்வொரு வகுப்பும் தொண்ணூறு நிமிடங்கள். நாவலுக்கான கருவை எவ்வாறு கண்டடைவது? கண்டடைந்த கருவை எவ்வாறு வளர்த்தெடுப்பது? கதாப்பாத்திர உருவாக்கம், கதைமொழி இப்படி எல்லாவற்றைக் குறித்தும் கற்பிக்கப்படும்.
5. பயிற்சியில் செயற்முறை பயிற்சியும் உண்டு. வாசித்த செய்திகளிலிருந்து எவ்வாறு கதைகளை உருவாக்குவதென்கிற பயிற்சி…
6. ஒரு பயிற்சிகாலத்தில் பத்து வாரங்கள் – மொத்தமாக முப்பது மணி நேரங்கள் வகுப்புகள் இருக்கும். இந்த காலகட்டத்தில் சிறப்பாக செயல்படுகிறவர்களை இந்த பயிற்சியின் வழியாய் உருவாகும் நாவல்களில் இருந்து சிறந்த நாவல் ஒன்றை எமது மோக்லி பதிப்பகமே நூலாகவும் வெளியிடும். ( நூறு சதவிகிதம் திருப்தியளித்தால் மட்டுமே நூல் அச்சாக்கம் பெறும்.)
7. நூறு பேர் ஒரு பயிற்சி காலத்தில் என்பது பெரிய எண்ணிக்கை என்பதால் குறிப்பிட்ட அளவிலானவர்களை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.
கூடுதல் விவரங்களுக்கு writerlakshmisaravanakumar@gamil.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
Comments