
அந்திமழை ஆசிரியர் இளங்கோவன் எனது ப்ரியத்திற்குரிய சகோதரர்களில் ஒருவர். இலக்கியவாதிகளின் மீது அபரிமிதமான அன்பையும் மரியாதையும் கொண்டிருப்பவர். தொடர்ந்து அந்திமழையில் நல்ல சிறுகதைகளையும் எழுத்தாளர்களின் பத்திகளையும் நேர்காணல்களையும் வெளியிட்டு அவர்களுக்கான தளத்தைக் கொடுத்துவருபவர்.
அவர் எந்தளவிற்கு என்மீது ப்ரியமானவரென்றால் இதழ் அச்சிற்கு செல்லவிருக்கும் கடைசி சில மணிநேரங்களுக்கு முன்னால் அழைத்து ஒரு மூன்று பக்கங்களுக்கு கட்டுரை வேண்டும் என அவ்வப்போது கேட்பதுண்டு. எப்போதுமே இந்த கடைசி நிமிட அரிபரியில் எழுதுவது எனக்கு பிடித்தமானதொன்று. இதனாலேயே அவர் கேட்கும் தருணங்களில் எல்லாம் அந்திமழை இதழுக்கு எழுதுவதை தவறாமல் செய்துவிடுவேன்.
கடந்த சில நாட்களுக்குமுன் இதேபோல் அழைத்து நாவல் பிறந்தகதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை கேட்டிருந்தார். தொடர்ந்து புனைவிலக்கியம் குறித்து வாசித்தும் எழுதியும் வருவதால் இதுவொன்றும் பெரிய வேலையில்லையென ஓரிரு மணிநேரங்களுக்குள் எழுதி அனுப்பிவிட்டேன். இந்தக் கட்டுரையை எழுதிமுடிக்கையில் தான் கானகன் என்ற நாவல் எனக்கு என்ன தந்ததென்கிற ஒரு பெரும் தெளிவு கிடைத்தது.
அதற்காக இளங்கோவன் அண்ணனுக்கு நன்றிக்கடன் பெற்றவனாகிறேன்.
கட்டுரையை வாசிப்பதற்கான இணைப்பு...
https://www.andhimazhai.com/special-section/special-stories/a-novel-that-gives-hope-by-lakshmi-saravanakumar