top of page
Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

உப்பு நாய்கள் வாசிப்பு - கிருஷ்ண பிரபு



எனது நாவல்கள் வெளியாகிற காலத்திலும் சரி அதற்குப் பின்பாகவும் தொடர்ந்து வாசிக்கப்படுவதும் விமர்சிக்கப்படுவதுமாக இருந்து வருகிறது. ஈராயிரத்து பத்தாம் வருடத்திற்குப் பின் எழுத வந்தவர்களின் புனைவுகளில் வாழ்க்கை குறித்த கண்ணோட்டங்கள் பாரிய அளவில் மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. நான் எனது முதல் நாவலிலிருந்து இந்த மாற்றங்களையே பிரதானமாக எனது புனைவுகளில் முன்னெடுக்க விரும்புகிறவனாக இருக்கிறான். கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பால் வாழ்வு அதிமுக்கியமானது. எழுதுகிறவனுக்கும் வாசிக்கிறவனுக்குமான தலைமுறை இடைவெளி அதிகரிக்கையில் புனைவெழுத்தாளனின் ஆன்மத் தேடலை புரிந்துகொள்வதில் தடுமாற்றங்கள் நிகழ்கின்றன. எனது நாவல்களில் கானகன் பெருமளவில் வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டிருந்தாலும் அதிகமான விமர்சனங்களை இன்று வரை பெற்றிருப்பது உப்புநாய்களும் கொமோராவும் தான்.


உப்புநாய்கள் வெளியானபோது எனது 24 வயது. அந்த நாவலின் உலகமென்பது அன்றைக்கு பெருநகரில் தனக்கென ஒரு இடமில்லாமல் இருள் வீதிகளில் ஓடிக்கொண்டிருந்த ஒருவனின் அன்றாடத்திலும் அவனைச் சூழ்ந்திருந்தவர்களின் பிரதிபலிப்பாகவும் உருவானது. அதில் அதிர்ச்சிகளை உருவாக்க வேண்டுமென்கிற தேவைகளோ உந்துதல்களோ எதுவும் எனக்கு இருந்திருக்கவில்லை. சொல்லப்போனால் பத்தாண்டுகள் கடந்து தொடர்ந்து வாசிக்கப்படுமென்று கூட நான் அப்போது நினைத்திருக்கவில்லை.

உப்புநாய்கள் நாவலுக்கு ஏராளமான மதிப்புரைகளும் விமர்சனங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சொல்வனம் இதழில் கிருஷ்ணபிரபு எழுதியிருந்த இந்த மதிப்புரைதான் முதலில் இந்த நாவலை கவனிக்கச் செய்திருந்தது.


https://solvanam.com/2013/01/28/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0/


12 views

Recent Posts

See All
bottom of page