top of page



சினிமா யாரையும் காப்பாற்றாது
எழுத்தாளர்கள் திரைப்படம் இயக்கலாமா என என்னிடம் கேட்டால் நான் தயங்காமல் சொல்வேன், இயக்கலாம். ஆனால் ஒரு எழுத்தாளன் இயக்குநராக மாறுவதற்கும் திரைப்படத்தை உருவாக்குவதற்கும் இடையில் மிகப்பெரிய தூரம் இருக்கிறது. அந்தத் தூரத்தை ஒரு நல்ல கதையை எழுதத் தெரிந்திருப்பதாலோ, நிறைய புத்தகங்கள் எழுதியிருப்பதாலோ, இலக்கியத்தில் சில விருதுகளைப் பெற்றிருப்பதாலோ கடந்து சென்றுவிட முடியாது. அதற்குள் வேறு ஒரு உலகம் இருக்கிறது. பணம் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது, சந்தை இருக்கிறது, மனிதர்களின் ஈகோ

லக்ஷ்மி சரவணகுமார்
13 hours ago


Midsommar - வெளிச்சத்தின் இருள்
அதிகாலை நான்கு மணிக்கு Midsommar படம் பார்த்தேன். படம் முடிவதற்கு முன்பாகவே விடியத் துவங்கி நல்ல வெளிச்சம் வந்துவிட்டது. அந்தத் திரைப்படத்திலிருந்த அச்சமூட்டும் வெளிச்சம் இன்றைய நாளின் வெளிச்சத்தையும் அச்சம் நிறைந்ததாக உணரவைத்தது. பொதுவாக ஒரு horror திரைப்படம் முடிந்ததும் அதன் இருளிலிருந்து வெளியே வர முயல்வோம். விளக்கை ஏற்றுவோம். ஜன்னலைத் திறப்போம். வேறு ஏதாவது பேசுவோம். ஆனால் Midsommar அப்படியல்ல. படம் முழுவதும் வெளிச்சம். சூரியன் முழுக்க ஆக்ரமித்திருக்கிறது. நீல வானம் இர

லக்ஷ்மி சரவணகுமார்
1 day ago


The wolf moon
” Herr God, Herr Lucifer Beware Beware. Out of the ash I rise with my red hair And I eat men like air.” Lady Lazarus By Sylvia Plath 1 வியன்னாவுக்கு அருகிலிருக்கும் வைடன் என்னும் கிராமத்திலிருந்து தேசாந்திரியாய் தனது பயணத்தைத் தொடங்கிய ஜேகப் ஸ்டேன்ஸ், 1858 வது வருடம் சில ஃப்ரெஞ்சு அதிகாரிகளுடன் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தபோது ஐம்பது வயதை நெருங்கியிருந்தார். பதினொன்றாவது வயதில் இசைக்கலைஞராக தன் வாழ்வைத் தொடங்கிய ஸ்டேன்ஸ் சிறு வயதில் தேவாலயத்

லக்ஷ்மி சரவணகுமார்
3 days ago


“வா மனமே, கங்கை யமுனையின் கரைக்குச் செல்வோம்.” ( கபீர்)
ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆம்பர்க்ரீஸ் என்ற பெயரில் எழுதத்துவங்கி என்னைப்போலவே அந்த நாவலும் பல்வேறு அலைச்சல்களையும் அடிகளையும் வாங்கி இப்பொழுது தன்னைத்தானே எழுதிக்கொண்டிருக்கிறது. வேறு பெயரில் வெளிவரும். அந்த நாவலில் வரும் நாயகன் தனது தந்தையின் மரணத்திற்குப்பின் கடும் மனக்குழப்பங்களுக்கு உள்ளாகிறான். வாழ்நாள் முழுக்க அவருக்கு எதிரான கருத்துகளை மட்டுமே பேசுவேன் என்பதில் உறுதியாக இருந்தவனுக்குள் ஏதோ நிகழ்ந்து அந்தக் குழப்பம் பயணம் செய்யச்

லக்ஷ்மி சரவணகுமார்
3 days ago


சொர்ணபுரி
அந்த மழைநாளில் கிளி பாடியது கல்லைத் தொட்ட கை மின்னியது. கதையைத் தொட்ட நா ஊமையானது. பின்னொரு நாள் கருங்குருவி பாடியது பெயரை மறந்தவன் உயிர் பிழைத்தான். வழியை நினைத்தவன் ஊர் திரும்பவில்லை. 1990 வது வருடம் முதல் முறையாக அந்த மலை குறித்த ரகசியத்தை என்னிடம் சொன்னபோது தாத்தாவுக்கு எண்பது வயது முடிந்திருந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக தீவிரமாக படித்துக் கொண்டிருந்த நான் அவர் சொன்ன கதைகளால் மனக்குழப்பமடைந்தேன். அதன்பிறகு அடிக்கொரு முறை அவரிடம் அந்த மலை குறித்த ம

லக்ஷ்மி சரவணகுமார்
4 days ago


பயணம் செய்யாத நாட்களில் நான் என்னவாகிறேன்?
Anywhere out of the world. Life is a hospital where every patient is obsessed by the desire of changing beds. One would like to suffer opposite the stove, another is sure he would get well beside the window. It always seems to me that I should be happy anywhere but where I am, and this question of moving is one that I am eternally discussing with my soul. "Tell me, my soul, poor chilly soul, how would you like to live in Lisbon? It must be warm there, and you would be as blis

லக்ஷ்மி சரவணகுமார்
4 days ago


சுவாரஸ்யமாக எழுதினால் நல்ல இலக்கியம் இல்லையா?
“இலக்கியம்” என்ற சொல்லைச் சுற்றி உருவாகியிருக்கும் மிகப் பழைய நம்பிக்கையில் ஒன்று, சுவாரஸ்யமாக எழுதப்படுவது நல்ல எழுத்து இல்லை என்பதுதான். ஒரு படைப்பு வாசகனை வேகமாக வாசிக்க வைத்தாலோ, அடுத்த பக்கத்தைத் திருப்ப வேண்டும் என ஆர்வப்படுத்தினாலோ அது வெகுஜன எழுத்தின் பண்பு. ஆனால் ஒரு படைப்பை வாசிக்கும்போது வாசகன் சிரமப்படுகிறான், உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அது தீவிர இலக்கியம். இவ்வாறான ஒரு மனப்பிரிவு நம் சூழலில் நீண்டகாலமாக இருக்கிறது. இந்த மனநிலைக்குப் பின்னால்

லக்ஷ்மி சரவணகுமார்
5 days ago


அல்லி பாத்திமாவின் பாண்டிச்சி
( 2022 ம் வருடம் எழுதப்பட்ட கட்டுரை) ஜீரோ டிகிரி நாவல் போட்டிக்கு நடுவராக இருந்தபோது அல்லி பாத்திமாவின் செல்லக்கருப்பி என்னும் நாவலும் போடிக்கு வந்திருந்தது. அதன் எளிமையும் மொழியின் அலங்காரங்களுக்குப் பின்னால் ஓடாத இயல்புத்தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது. தான் சொல்ல நினைத்தக் கதையைச் சரியாக சொல்ல வேண்டுமென்கிற கவனத்துடனும் அந்தக் கதாப்பாத்திரங்களை வாசிக்கிறவர்களின் கண்முன்னால் உயிர்ப்போடு நிறுத்தவேண்டுமென்கிற மெனக்கெடலும் அதில் இருந்தது. அந்த நாவல் போட்டியில் பரிசு வெ

லக்ஷ்மி சரவணகுமார்
5 days ago


மேடைக்கு வந்த காகங்கள் - OMNIA
இசையின் எந்த அடிப்படைகளும் தெரியாத தற்குறி நான். ஆனால் ரசனையின் பெயரில் நிறையக் கேட்பதுண்டு. நண்பர்கள் பரிந்துரைப்பதன் வழியாகக் கேட்பது பின் அந்த இசைக்குழுவின் விருப்பமானவர்கள் யாரெனத் தேடிப்பிடித்து அவர்கள் சொல்கிற குழுவையும் கேட்பது. இப்படித்தான் எனக்கு விருப்பமான ஒரு சிறிய வரிசையை வைத்திருக்கிறேன். 2012 ம் வருடம் அப்படி தற்செயலாக கேட்டுப் பிடித்துப்போன இசைக்குழுதான் OMNIA. எனது பழைய முகநூல் கணக்கில் அந்தக் குழுவின் பாடல்களைக் குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். நான் எழுதிய

லக்ஷ்மி சரவணகுமார்
6 days ago


ஃபனா
நேற்று பின்னிரவு வேலைகளுக்கு நடுவே நூருல் ஹஸன் என்பவர் எழுதிய நூர் என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். நூர் என்ற சொல்லின் மீது எனக்கு என்றென்றைக்குமான ப்ரேமை உண்டு. என் முதல் காதலியின் பெயர். காதலென்று சொல்லுக்கு பொருளே தெரியாத வயதில் வந்ததாலோ என்னவோ அந்த விருப்பம் அழகானதாகவும் மறக்கமுடியாததாகவும் இருக்கிறது. இந்த நூலில் அந்த இளைஞன் தனது வாழ்வில் எவ்வாறு ஓர் இறை அனுபவத்தை அடைந்தேன் என்பதைப் பதிவு செய்திருக்கிறார். அந்த நூல் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று சொல்ல முடியாத

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 30
bottom of page