top of page



பன்றிவேட்டை நாவல் உரையாடல் - காணொளி
நண்பர் சிறகன் ஒருங்கிணைப்பில் கடந்த 22 ம் தேதி இணைய வழியில் உரையாடல் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது. எழுத்தாளர்கள் அ.வெண்ணிலாவும், கார்த்திகைப்பாண்டியனும் நாவல் குறித்து தங்களது கருத்துகளை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். இரண்டு மணி நேரம் நிகழ்ந்த இந்த நிகழ்வில் குறைவான நபர்களே கலந்துகொண்ட போதிலும் உரையாடல் ஆரோக்கியமானதாக இருந்தது. ரூஹ், கொமோரா, கானகன் என எனது பிற நாவல்களிலிருந்து தனது உரையைத்துவங்கிய எழுத்தாளர் வெண்ணிலா கானகனுக்கும் பன்றிவேட்டைக்கும் இருக்கும் தொடர்புகளைக்

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 26, 2025


கொமோரா நாவலிலிருந்து சிறிய பகுதி
Children village - 1 எல்லாம் இங்கிருந்து துவங்கியதுதான். வன்மம், ஏமாற்றம், பசியென எல்லாவற்றுக்கும் பால்யத்திலேயே பழக்கப்படுத்தின சூன்யப்பேழை அந்த விடுதி. இன்னொரு வயிற்றுக்குக் கூடுதலாக உணவைத் தேடுவதன் சிரமத்திலிருந்த கதிரின் அம்மா தனக்குத் தெரிந்தவர்களின் மூலமாய் இந்த விடுதியில் கொண்டு வந்து சேர்த்தாள். கதிர் அப்பாவை வெறுக்கத்துவங்கியதும் இங்கிருந்துதான். வீட்டிற்கு பொறுப்பாய் அந்த மனிதர் இருந்திருந்தால் இவன் சபிக்கப்பட்ட இந்த விடுதிக்கு வந்திருக்க வேண்டிய தேவை இருந்திருக

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 25, 2025


ஹரிகிஷன் கவுலின் ‘ஞாயிறின் ஒளி’
ஸ்ரீநகரில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ஹரிகிஷன் கவுல் கஷ்மீரி புனைவிலக்கியத்தில் தனித்துவமான எழுத்தாளர். எப்போதும் ஊடகங்களாலும் ராணுவத்தாலும் கண்கானிக்கப்படும் ஒரு நிலத்தில் வாழ்கிறவர்களது மனநிலை நிலையானதாக இருப்பதில்லை. வன்முறைக்கு நடுவே பல தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் கதைகள் ஏதாவதொரு சார்புடனேயே இருக்கிறது. கஷ்மீர் மக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வன்முறை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டதல்ல. மிக நீண்ட வரலாறும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் கொண்ட

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 22, 2025


நம் நண்பர்களை நாம் எவ்வாறு பார்க்கிறோம்?
சில வருடங்களுக்குமுன் நடந்த சம்பவம். சென்னையில் ஒரு தம்பியின் திருமணத்தை முடித்துக் கொண்டு அவசரமாக விமானத்தில் கிளம்பி மதுரையில் நடக்கும் எனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டும். குறைவான உடமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவசரமாக விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமானத்திற்கான காத்திருப்பில் தற்செயலாக எனது ஊரைச் சேர்ந்த பால்யகால நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. என்னைவிட சில வருடங்கள் மூத்தவர் என்றாலும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியதால் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பழக்

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 19, 2025


பெருங் கனவுகளின் உலகம்…
”நீங்கள் உங்களின் வாழ்வில் எதிர்கொள்வதில் தற்செயலானவை எதுவும் இருக்கப் போவதில்லை. எல்லாம் எப்போதோ உங்களின் கனவுகளில் உங்களுக்கு நேர்ந்தவையே.” கனவென்னும் நீருடல்… ” நீ வாசிக்க இருக்கும் இக்கதை சொல்லப்பட்டதோ கேட்கப்பட்டதோ அல்ல எனதன்பு வாசகா…. கதை சொல்லியின் குழப்பமான துர்கனவுகள்… வெவ்வேறு தினங்களில் தனது கனவுகளில் நிகழ்ந்த சம்பவங்களை தொகுத்ததாக சொல்லும் கதை சொல்லி, யாவும் கனவே என்கிறான்….” 1 அந்த ரயில். களைத்து ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் ரயில் மூன

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 17, 2025


பன்றிவேட்டை இணையவழி உரையாடல் நிகழ்வு
நண்பர் சிறகனின் ஒருங்கிணைப்பில் பன்றி வேட்டை நாவலுக்கான இணையவழிக் கூட்டம் வரும் நவம்பர் 22 ம் தேதி மாலை 7 மணிக்கு இணைய வழியாக நடக்க இருக்கிறது. இந்த உரையாடலில் எழுத்தாளர்கள் அ.வெண்ணிலா, கார்த்திகைப்பாண்டியன், காதர்ஷா இவர்களோடு நானும் உரையாற்றுகிறான். நாவல் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். இந்த நாவலுக்கு நடத்தப்படும் முதல் அறிமுகக் கூட்டம். தமிழ் இலக்கியச் சூழலில் நூல்கள் வெளியிடுவதும் வாசிப்பதும் அதிகரித்துள்ளது. ஆனால் அந்த வாசிப்பு குறுகிய மனநிலை கொண்டதாக சுங்க

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 13, 2025


நீலப்படம் நாவலிலிருந்து ஒரு பகுதி
ஆனந்தி தன் அம்மாவிற்கு எழுதிய கடிதம். அம்மா… ’தேவ்டியா’ என்ற வார்த்தையை முதல் முறையாக எனக்கு அறிமுகப்படுத்தியது நீதான். இப்போது வரையிலும் ஊரில் உன்னைப் பற்றியதான நினைவுகள் எல்லோருக்கும் அப்படியாகத்தான் இருக்கிறது. அந்த வார்த்தையில் இருந்த வசீகரம் சிறு வயதிலேயே எனக்குப் பிடித்திருந்ததால் அது சொல்லக் கூடாத வார்த்தையென்றோ அந்த வார்த்தைக்கானவர்கள் அருவருப்பானவர்கள் என்றோ எனக்குப் படவில்லை. சரியாகக் கணக்கிட்டு சொல்வதானால் பதிமூன்று வயதிற்குள்ளாக பதிணெட்டு நபர்களை அப்பாவென நான்...

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 11, 2025
bottom of page