
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் கொமோராவின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியது நிறைவானதொரு அனுபவமாக இருந்தது. ஏராளமான வழக்குகள் அலைச்சல்களென அவர் கடும் சிரமங்களை எதிர்கொண்டு மீண்டிருந்த நாட்கள் அவை. அதனாலேயே அவரை அழைப்பதில் சில நெருக்கடிகள் இருந்தன. அவருமே அழைப்பிதலில் தனது பெயரைப் போடவேண்டாம், காவல்துறையிலிருந்து நெருக்கடிகள் வரக்கூடலாம் நான் நேரடியாக நிகழ்ச்சிக்கு வந்துவிடுகிறேன் எனச் சொல்லியிருந்தார். சொன்னது போலவே நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பானதொரு உரையைத் தந்தார்.
அரசியல் தளங்களில் வேலை செய்கிறவர்களும் இலக்கியவாதிகளும் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டியது ஒரு மொழியின் சூழலில் முக்கியமானது. நல்ல படைப்புகள் ஆரோக்கியமான உரையாடல்களில் இருந்து மட்டுமே உருவாக முடியும். தமிழ் சூழலில் இலக்கியமும் அரசியலும் இருவேறு பாதைகளாகவே நீண்டகாலமாக இருந்து வருகிறது. அதனாலேயே அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கதைகள் அதிகமாக எழுதப்படக்கூடிய சங்கடங்கள் நிகழ்கின்றன. புதிய இலக்கிய போக்குகள் உருவாகவும் இலக்கியம் அரசியல்மயாகவும் இதுபோன்ற உரையாடல்கள் முக்கியமானது.
தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரைக்கான காணொளி இணைப்பு.
https://www.youtube.com/watch?v=-L0dXBmNqg8