top of page

கானகன்

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 20 minutes ago
  • 3 min read

லக்ஷ்மி சரவணக்குமாரின் நிறைய கதைகள் நம் வாழ்வில் மறைந்து வாழ்ந்து., நாம் காணாமல் இருக்கும் மனிதர்களைப் பற்றியதாகத் தான் இருக்கும். (நீலப்படம், உப்பு நாய்கள்)


கானகன் நம் காணாமல் இருக்கும் மனிதனைப் பற்றி தான் ..,

ஆனால், அவன் நம்மை விட்டு விலகி வாழும் மனிதன். அவனுக்கு நம் தயவு தேவையில்லை. நாம் அவனுக்கு செய்யும் பேருதவி அவனை விட்டு விலகியிருப்பது தான்.


நாம் சொல்லிக் கொள்ளும் சமூகம் என்பது சும்மாயிருப்பவர்களை கூரான வாள் கொண்டு சொரிந்து விட்டு சுகம் காணும் ஜென்மமாகவே இருக்கிறது.

இந்த வகையில் தான் இந்நாவல் கவனம் பெறுகிறது.


இங்கு வாழ்தல் என்பது பிழைத்தலாக தான் இருக்கிறது. பிழைதலுக்கு தேவையானதை ஆவேசமாக நுகரும் அதேவேளையில் அதற்கு ஆதுரமான மூலகங்களை மறந்து விடுதல் தான் மனிதனின் அழிவுக்கு காரணமாகிறது.

இதை இப்படிக் கூட சொல்லலாம்...


தங்க முட்டையிடும் வாத்தை அறுத்தல்.., (இந்த கதை குழந்தைக்கும் தெரியும்)

கரையோரம் கல்லெறிந்தக் கதை..?


"அடர்ந்த இரவில் சுய வெறுமையை போக்கிக் கொள்ள ஆற்றங்கரையோரம் அமர்ந்து கொண்டிருந்த மனிதன் தன்னருகில் உள்ள கற்குவியலில் ஒவ்வொன்றாய் எடுத்து நீரில் வீசி அதன் பொருட்டு எழும் நீரலை ஒசையின் துணைக் கொண்டு அந்த இரவின் ஆக்கிரமிப்பிலிருந்து கடந்து விடுகிறான்.


காலைக் கதிரொளியில் கையில்லுள்ள கடைசிக் கல்லை கண் பார்க்க .. அது வைரமாய் மின்னுகிறது.., "

பேராசையும்.., அப்போதைய (தேவையற்ற) தேவையும் தான் மனிதனின் வீழ்ச்சியை தீர்மானிக்கிறது.


அடைமொழியில் சிங்கம், புலி சிறுத்தை என்று போட்டுக் கொண்டு மனிதன் என்பதை மறந்து விடுகிறார்கள்.

காட்டுயிர்களை சிதைப்பது தவறு என்றே இப்போது வரை நிறைய பேருக்கு தெரியவில்லை. இந்த உலகமும் இதில் உள்ளதும் மனித ஜென்மத்திற்காக மட்டுமே என நினைத்துக் கொள்வது பெரும் நோய்.


ஒரு புள்ளி விபரக்கணக்கின்படி:

நமது இந்தியக் காடுகளில்

1875-1925 க்கும் இடைப்பட்ட வெறும் ஐம்பதே ஆண்டுகளில்..,

மனிதர்களால் கொல்லப்பட்ட/வேட்டையாடப்பட்ட

புலிகளின் எண்ணிக்கை:80,000

சிறுத்தைகள்:1,50,000

ஓநாய்கள் :200,000

George Yule என்கிற ஒரு பிரிட்டிஷ்காரன் மட்டும் இந்தியாவில் 400 புலிகளை கொன்றுள்ளான்.


வேதனையும் அதிர்ச்சியும் என்னவெனில் இக்கொலை யாதொரு தேவையுமின்றி வேட்டை என்ற பெயரில் வெறும் வேடிக்கை பொழுதுப்போக்கு சாகசத்திற்கு மட்டும் அரங்கேற்ற்ப்பட்டுள்ளது.


(பிற்பாடு தான் இதிலுள்ள வணிக சந்தை கண்டறியப்பட்டது).

இதன் தொடர்ச்சியாகவே சுதந்திரத்திற்கு பின்பும் சிற்றரசர்கள்,ஜமீன்தாரர்கள், பண்னையாளர்கள் மூலம் வேட்டை தொடர்ந்து நடந்தது.


இருபதாம் நூற்றாண்டில் கொத்து கொத்தாக வேட்டையாடப்பட்ட காட்டுயிர்களைப் பற்றி இந்நாவல் சிறு துளியளவு தான் கதைத்துள்ளது. வெளிவராத கதைகள் ஏராளம்.

வழக்கம் போல் காமத்தை பட்டுவர்த்தனமாக கதைகளில் நுழைக்கும் பாணியை லக்ஷ்மி சரவணக்குமார் இதிலும் சிறிது கையாண்டுள்ளார். முந்தைய புத்தகங்களான நீலப்படம், உப்புநாய்களை ஒப்பிடும் போது கானகனில் குறைவு தான். இருப்பினும் வலுவான, ஒரு உணர்வுபூர்வமான கதைகளத்தில் இத்தகைய கமர்ஷியல் தனமான கட்டுமானம் நாவலை வலுவிழுக்கச் செய்து விடும்.


காட்டின் மேடு பள்ளங்கள் போல் கதை சில இடங்களில் தொய்வாகவும் சில இடங்களில் விறுவிறுப்பாக நகருகிறது.


காட்டில் இருக்கும் வேட்டையாடி தங்கப்பன் மூன்று மனைவிக்கு சொந்தக்காரன். திண்பதிலும் புணர்வதிலுமே வாழ்வின் ஒட்டு மொத்த மகிழ்ச்சியைக் காண்கிறேன். அதை விட அவனுக்கு பெரும் மகிழ்ச்சி என்பது கானகத்தை சூறையாடுவது தான்.

அவன் செய்யும் அழிவுகள் எல்லையில்லாதது..., வெறியோடு காட்டை வேட்டையாட வரும் பலருக்கு உதவியாக இருக்கிறான். விலங்குகளை துரத்திக் கொல்லும் மூர்க்கத்தனங்களோடு., கஞ்சா செடி வளர்ப்பும் காட்டின் உள்பகுதியில் அமோகமாய் நடக்கிறது.


காட்டின் பூர்வக் குடிகளின் எதிர்ப்பு மென்மையாக செல்லும் போது கம்யூனிஸ்டுகளின் வருகையும் உதவியும் அவர்களின் புரிதலை மேம்படுத்துகிறது.

ஆனாலும்..,

இதையெல்லாம் மிஞ்சி வீறு கொள்கிறது அரசியல் ஆணவமும் வனத்துறை அலட்சியமும்.


வன தெய்வங்களின் ஆதிவழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டுள்ளன.

 காட்டின் ஆத்மாவாக ஒன்றிப் போயுள்ள தனது தந்தையின் மீதான புரிதல் கனியும் வேளையில் வாசி என்கிற பூர்வக் குடி இளைஞன் காட்டின் பெருங் காதலனாகவே மாறிவிடுகிறான். யானைகளின் கூர்மதிகள் அனைவரும் அறிந்ததே. இதிலும் இது தொடர்பான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. எனது சிறு வயதில் யானைகள் மனிதர்கனை வன்மம் வைத்து பழிவாங்கும் கதைகளை நிறைய கேட்டதுண்டு.

பாம்பும் அம்மாதிரியே... ஆனால்... இதில் புதிதாக ..,புலிகள் வன்மம் வைத்து பழிவாங்குவதாக கதை கட்டமைக்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ இயற்கையை இயற்கையாக வைத்திருத்தலே சிறப்பு. காடுகள் பூமியின் பெரும் ஜீவாதாரங்கள். இன்றைய தொழில்நுட்பங்கள் வசதியை அதிகப்படுத்தியுள்ளன.

ஆனால்..,

நமது பெரும் சொத்தான விழிப்புணர்வை கொன்று போட்டுள்ளன. இதுவொரு மறுக்க முடியாத நாம் மறந்த விட்ட உண்மை.

அந்த விழிப்புணர்வின் கொஞ்சம் நஞ்சம் நாம் நாகரிகமற்றவர்களாக கருதும் பூர்வக்குடி வன மக்களிடம் எஞ்சி நிற்கிறது.


இன்றும் தங்கள் கலாச்சார பண்பாட்டின் மூலம் வனத்தை காத்து வரும் நிறைய வனக்குடிகள் இருக்கின்றன.

ஒரு மலைப்பாம்பின் வாசத்தை அரை மைல் முன்னதாகவே உணர்ந்து கொண்ட ..,

மரம் (ம) இலையின் சலசலப்பை வைத்தே எத்தனை யானைகள் ..?எவ்வளவு தூரம்..? எந்த திசை..?

 என்றும்..,

குரங்கு (ம) பறவையின் குரலை வைத்து நெருங்கி வருவது ஓநாயா.., புலியா ..? எந்த வகை விலங்கு அது.. என்ற கூர்நோக்கு விழிப்புணர்வைக் கொண்ட பூர்வக் குடி மனிதர்ள் சிலரோடு சில நாட்கள் வாழ்த்து பழகி வியந்திருக்கிறேன்.

பரம்பிக்குளத்தில் புலிகள் சரணாலாயம் அமைக்கும் போது அதற்கு இடைஞ்சலாக இருந்தது அங்கு வாழ்ந்து வந்த வனக்குடிகளின் கால்நடை வளர்ப்பு. ஆனால் இதை உணர்ந்த அம்மக்கள் தாமகவே முன்வந்து தங்களின் வாழ்வதரமான 10, 000 க்கு மேற்பட்ட கால்நடைகளை மலைக்கு கீழே காட்டை கடந்து சமவெளிக்கு கொண்டு வந்தார்கள்.


காட்டின் மறு சீரமைப்பில் தங்களையும் இனைத்துக் கொண்டனர்.

ஒரு காட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றால் அதுவே பேருயிர்கள் நிறைந்த விஸ்தாரமான பெருங்காடு.

ஒதுங்கியிருப்போம்.

உயிர் கொடுப்போம்.

காடு நமது ஆன்மாவின் இருப்பிடம்.

மெளனமே ஆன்மாவின் ஆகிருதி.

வாழ்த்துகள் .நன்றி.


அன்புடன்

மஞ்சுநாத்.

Manju Nath.

february 24 2021


 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page