top of page



ரூஹ்
"கானகன்" புகழ் லஷ்மி சரவணகுமார் என்றுதான் எனக்குத் தெரியும். இவருடைய கானகன் நாவலை எத்துணை பேரை படிக்கச் சொன்னேன் என்று என்னாலேயே சொல்ல முடியாது. காட்டைப் பற்றி அது பேசியது எனில் கடல் பற்றி ரூஹ் பேசுகிறது. நம் அனைவருக்கும் தெரிந்ததுதான் "ரூஹ்" என்பது கோஹினூர் போல இன்னொரு வைரம். ஆனால் தெரியாதது அதனை வைத்து இப்படி ஒரு நாவல் எழுத முடியும் என்பதை. ஒரு முன்னூறு வருடங்கள் முந்தைய வரலாறு கொண்டவர்கள் இந்தக் கதைநாயகன் ஜோதியின் மூதாதையர்கள். அவர்கள் கூத்துக்கலையைக் கைகொண்டு வாழ்க்கை

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 5


கானகன்
லக்ஷ்மி சரவணக்குமாரின் நிறைய கதைகள் நம் வாழ்வில் மறைந்து வாழ்ந்து., நாம் காணாமல் இருக்கும் மனிதர்களைப் பற்றியதாகத் தான் இருக்கும். (நீலப்படம், உப்பு நாய்கள்) கானகன் நம் காணாமல் இருக்கும் மனிதனைப் பற்றி தான் .., ஆனால், அவன் நம்மை விட்டு விலகி வாழும் மனிதன். அவனுக்கு நம் தயவு தேவையில்லை. நாம் அவனுக்கு செய்யும் பேருதவி அவனை விட்டு விலகியிருப்பது தான். நாம் சொல்லிக் கொள்ளும் சமூகம் என்பது சும்மாயிருப்பவர்களை கூரான வாள் கொண்டு சொரிந்து விட்டு சுகம் காணும் ஜென்மமாகவே இருக்கிறது. இந

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 5


ரூஹ் – மனம் காட்டும் கண்ணாடி
வாசித்து முடித்ததும், அழுதுவிட்டேன். உண்மையில் வாசிக்கும் போதே அழ ஆரம்பித்துவிட்டேன். நமக்குள் இருக்கும் நமது பலவீனங்களை அதன் நகர்வுகளையும் லஷ்மி சரவணகுமாரால் எளிதில் கண்டறிய முடிகிறது. அப்படித்தான் ‘ரூஹ்’ எனது பழைய நினைவுகளையும் எனது நண்பர்களின் வாழ்க்கையையும் மீள் செய்வதாக அமைந்திருந்தது. ல.ச.கு-வின் எழுத்துகளின் நமக்கு தெரியாத மனிதர்கள் பற்றிய அறிமுகம் எப்போதுமிருக்கும். அவர்களின் வன்மம், காமம், கனிவு, அன்பு, நம்பிக்கை, அழுகை, என பல திசையிலிருந்து கதாப்பாத்திரங்களை அவரால்

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 5


‘த்தூ...’
( 2008 வது வருடம் வெளியான சிறுகதை) ‘த்தூ...’ என யாரோ யாரையாரையோ திட்டிக் கொண்டிருந்தது அந்த வீதியிலிருந்த யாவரையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்ததைப் போலவேதான் அவனையும் திரும்பிப்பார்க்க வைத்தது. மாநகராட்சி கட்டணக் கழிப்பறையை ஒட்டி இன்னும் சரியாய்ச் சொல்ல வேண்டுமானால் சற்றே இடது புறம் அப்பால் நின்று சாலையோரத்தில் சிறுநீர் கழித்த ஒருவனை கழிப்பறைக்குக் காவலிலிருந்த பெண் திட்டிக் கொண்டிருந்ததுதான் அத்தனை பெரிய சத்தமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவள் உதிர்த்த இன்னபிற

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 5


போர்க்குதிரை
பதினொரு கதைகளையுடைய 'போர்க்குதிரை' எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின ஏழாவது சிறுகதைத் தொகுப்பு. சிறுகதைகள்தான் தனக்கான அடையாளமாகத் தோன்றுகிறது என்று கூறும் லஷ்மி, தனது நண்பர்களுடனான உரையாடல்கள் மற்றும் பயணங்கள் மூலமாகவே தனது கதைவெளி உருக்கொள்வதாக முன்னுரையில் தெரிவிக்கிறார். அதனை உறுதிப்படுத்துவது போலவே தொகுப்பின் கதைகளும் அமைந்திருக்கின்றன. தொகுப்பிலுள்ள கதைகளில் 'ரகசியத்தின் அரூப நிழல்கள்' மட்டுமே நான் முன்னரே வாசித்த கதை. மலைகள்.காம் இணைய இதழில் வெளிவந்த அந்தக் கதையே தொகுப்பில்

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 4


ரெண்டாம் ஆட்டம்
ரெண்டாம் ஆட்டம் லஷ்மி சரவணக்குமார் நாவல் விகடன் பிரசுரம் ஜனவரி 2022 பக்கம் 432 விலை 650 1960 களுக்குப் பிறகு மதுரை எவ்வாறு வளர்ச்சி அடைகிறது, மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்கள் எப்படி மதுரையை நகரமாக மாற்றுகின்றன, அதற்காக அந்த கிராம மக்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்து மதுரையை எவ்வாறு பெருநகரமாக்கி மக்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது என்ற அடிப்படையில் இக்கதை எளிய மக்களின் வாழ்வியலை, எளிய மக்களின் வலியை, பழிக்குப் பழிவாங்கும் உணர்வை, துரோகத்தை, வஞ்சகத்தை நமக்குள் கடத்துகிறது. 196

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 4


உரித்துக்காட்டாத எழுத்தும்,என் எண்ணங்களின் குரலும் : கொமோரா
முழுமைக்கான மனித உணர்வில் வன்முறையும் நம்மோடு பயணித்து கொண்டிருக்கையில்,அதன் நீட்சி எப்படி முழுதாய் இருள் சூழ்ந்து இருக்கமாய் இருக்கிறது என்பதே தணல் அணையாத கொமோரா. பிரதான மையமான Character-இன் (பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை) பார்வையில் நம்மை இழுத்து அவனின் உணர்வுகளை பிரதிபலிக்க செய்த இடத்தில் இந்த புத்தகம் நிமிர்கிறது. குரூரம்,வன்முறையை தனக்கான பாதையாய் கையில் எடுத்து,திசை இரண்டைப் பிணைத்து (கம்போடியா,மதுரை) அதன் விஷயங்களை உடைக்கும் இடம் பிரமாதம். நிரம்பிவிடாத வாழ்க்கை

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 4
bottom of page