top of page



நீலநதி - கிண்டில் பதிப்பு.
குருதியில் விளைந்த கதைகள். சில கதைகள் நம்மால் எழுதப்படுவதில்லை. அவை நீண்ட காலம் நம்முள் தங்கியிருந்து, சரியான ஒரு தருணத்தைத் தேர்ந்தெடுத்து தாமாகவே வெளியில் நடக்கத் தொடங்குகின்றன. பல ஆண்டுகள் கழித்து அந்தக் கதைகளைத் திரும்பிப் படிக்கும் போது, அவை நம்முடையவைதானா என்று கூட சில நேரங்களில் தோன்றுகிறது. அந்த அந்நியத்தன்மைதான் எழுத்தின் மிக அமைதியான உண்மைகளில் ஒன்று. 2007 ஆம் ஆண்டு எனது முதல் சிறுகதை வெளியானது. இலக்கியத்தின் மீதான பிடிவாதமான நம்பிக்கையோடு எழுதத் தொடங்கிய என்னை கவனி

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 15


ரவிக்கையுள் மறையும் வனம். ( சிறுகதை )
சற்றைக்கு முன்னர் வரையிலும் அவளை மறுபடியும் பார்ப்போமென அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. பார்த்த மாத்திரத்தில் அது அவளாக மட்டுமே இருக்க முடியுமென உறுதியாக நம்பியவன், சனத்திரள் மிகுந்த அப்பகுதியிலிருந்து அவளைப் பின்தொடர்ந்தான். பிய்த்து ஒட்டவைக்கப்பட்ட பொம்மைகளின் முகங்களாய் அவ்வளவு பெரிய வீதி முழுக்க இடைவெளியின்றி அடர்ந்து கிடந்தன மனித முகங்கள். தன்னோடு தூக்கி வந்த வனத்தின் வாசனையை சிறிது சிறிதாய் கசியவிட்டிருந்தவள் பதிலியாய் இங்கிருந்த இத்யாதிகளின் வாசனைகளைத் தன்வசப்படுத்தி வி

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 13


முட்டையிடும் குதிரைகளின் நகரம். ( சிறுகதை )
( 2007 ம் வருடம் வெளியான சிறுகதை. ) குதிரைகளைப் பற்றிய கதைகளை அவளுக்குச் சொல்லத் துவங்கிய தினத்திலிருந்துதான் அவற்றின் மீதான பிரத்யேகமானதொரு ஆர்வம் இவனுக்குள்ளும் வளரத் துவங்கியிருந்தது. ஓரளவு நடை பழகத் துவங்கியிருந்த நிவேதிதா யார் மூலமாய்த் தெரிந்து கொண்டாளெனத் தெரியவில்லை, பார்த்த மாத்திரத்தில் அதன் தோற்றத்தில் வசீகரிக்கப்பட்டவள் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு தான் உச்சரிக்கத் துவங்கியிருந்த ஒரு சில வார்த்தைகளோடு குதிரையென அதனையும் சேர்த்துக் கொண்டுவிட்டாள். சிறியதொரு பூ

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 8


இருளில் தொலைந்துபோனவன்.
( 2008 ம் வருடம் வெளியான சிறுகதை.) பணி நிமித்தமாய் சொந்த ஊரைவிட்டு அவன் இங்கு வந்திருக்கையில் இருபத்தி நான்கு வயதுதான் ஆகியிருந்தது. முன்புறங்களும் பின்புறங்களும் பருத்து உருண்டு திரண்ட மாநகரப் பெண்களின் உடல்களின் மீதான மயக்கத்தினை முன்பு அவன் உணர்ந்ததில்லை. சொந்த ஊரின் இளம் பெண்களின் மெலிந்த உடல்களையும் கைகால்களையுமே இதுநாள் வரையிலும் பார்த்திருந்தான். இன்னுஞ் கொஞ்சம் சதை போடாதாவென அவர்கள் கொள்ளும் ஏக்கம் பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகாகவே நடக்கக் கூடியதாயிருக்கும். சிலர

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 7


ஒரு நேர்காணல்
ரெண்டாம் ஆட்டம் நாவலின் ஒலி வடிவம் விகடன் ப்ளேவில் வெளியிடப்பட்டதை முன்னிட்டு செய்யப்பட்ட நேர்காணல் இது. ரெண்டாம் ஆட்டம் தொடர் எழுத நேர்ந்ததன் பின்னால் இருக்கும் காரணங்களையும் அதில் வரும் கதாப்பாத்திரங்களின் பின்னனி குறித்தும் விரிவாக பேசியிருக்கிறேன். எனது மற்ற நாவல்களைக் குறித்தும் எனது திரைப்படப் பணிகள் குறித்தும் நிகழ்ந்த நல்ல உரையாடல். குறிப்பாக லிங்கம் தொடர் குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன். நல்லதொரு நேர்காணல். https://youtu.be/r0puxfOCIxo?si=80LWPgLuQOb-N

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 6


கொமோரா
மனிதர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பத்திலும் துயரத்திலும் வாழ்பவர்கள். ஆனாலும் வாழ்க்கை அவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திக் கொண்டே தான் இருக்கிறது. இழந்தவை ஒருபுறம் இருந்தாலும் இனி வரப்போவதில்லை எதிர்கொள்ள வாழ்க்கை அவர்களை எப்பொழுதும் தயார்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. என்றாவது தம் வாழ்க்கை மாறிவிடும், தான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரிவதில்லை, அந்தந்த நேரத்து சந்தோஷங்கள்

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 6


நீலப்படம்
நாவலை வாங்க கையிலெடுக்கும் போதே ஒருசில உதடுகளில் நமட்டுச்சிரிப்புடன் குரூர பார்வைக்கு உள்ளாக வேண்டியதாயிற்று அங்கிருந்தே லக்ஷ்மி சரவணகுமார், ஆனந்தியின் மனோநிலையை என்னுள் திணித்துவிட்டார்.அதிலிருந்து ஆனந்தியின் கோபம் ஒன்றும் இயல்பற்றதாய் தோன்றியதில்லை. நீலப்பட நாவல் பி க்ரேட் பட நடிகையான ஆனந்தியின் கடந்தகால கொடூரமான பக்கங்களுடன் தொடங்கி சிறுமிகள் மீதிழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை எனும் மைய தளத்துள் வியாபிக்கிறது (my point of view).ல.ச.கு வின் பிற நாவல்களை போல இதற்கான விமர்சனங

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 6
bottom of page