top of page



1.06.08 அன்று இறந்து போனவனைநினைவுபடுத்துவதற்கு ஒருவருமில்லை.
2008 ம் வருடம் புது எழுத்து இதழில் வெளியான சிறுகதை. வெறும் உடல்தான். ஆறு மணி நேரத்திற்கு முன்பாகத் தன் இயக்கத்தினை நிறுத்திக்கொண்ட அவ்வுடலின் நிறம் இன்னதென்று அனுமானிக்க வியலாதபடி அடர்த்தியாகிக் கொண்டிருந்தது. கருமையும் சாம்பலும் கலந்த விநோத வர்ணத்தில் முன்பாக அவ்விடத்தினை முழுமையாய் ஆக்கிரமித்து விட்டிருந்த வாடையில், சவமாகிப் போன இவ்வுடலின் வீச்சமும் கரைந்து போய் விட்டிருந்தது. இறந்து கிடந்தவனின் முகத்தில் பல நாட்களாக மழிக்காமலும், பராமரிப்பின்றியும் விட்டுப் போன சிண்டு பிடி
லக்ஷ்மி சரவணகுமார்
Feb 27


பூனைகளின் வீடு
(2008 ம் வருடம் மணல்வீடு இதழில் வெளியான சிறுகதை ) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ன்த் பி'யில் படித்துக் கொண்டிருந்த வாசுகி, மாதத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்த நாட்களொன்றில் கணக்குத் தேர்வை எழுதி முடித்துவிட்டு பத்து சதவிகிதம் கூட தேர்ச்சியாவதற்கு வாய்ப்பில்லை என்கிற வருத்தத்தோடு வீட்டிற்குத் திரும்பியபோதுதான் நகராட்சிக்குப் பின்புறம் இந்தப் பூனை குட்டியாகக் கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். கிளிகள் மட்டுமே வளர்க்கப் பிரியப்பட்டிருந்தவள். அவை கிடைக்காத காரணத்தினாலோ அல்லத
லக்ஷ்மி சரவணகுமார்
Feb 25


வாய்ப்புகளும் வெற்றிகளும்…
தனிப்பட்ட செய்திகளிலும் மின்னஞ்சல்களிலும் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகளாக சமீபத்தில் நான் காண்பது சினிமாவில் எனக்கொரு வாய்ப்பு வேண்டும். சிலர் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவான நோக்கத்தோடு இருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு என்ன வேண்டுமென்கிற தெளிவெல்லாம் இல்லை. ஏதாவதொரு வாய்ப்பு. துணை நடிகராகவோ, உதவி இயக்குனராகவோ, என்ன வேலையென்றாலும் ஓகே எனக் கேட்கும் போது உண்மையிலேயே குழப்பமாக இருக்கிறது? இவர்கள் எந்த நோக்கத்திற்காக திரைப்படங்களை நோக்கி வர விரும்புகிறார்கள்.? 2010
லக்ஷ்மி சரவணகுமார்
Feb 25


பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
சிவபாலனின் வருகையால் மனம் நிறைந்தது. கடந்த வருடம் முதல் முறையாக அவனை சந்தித்தபோது இத்தனை நெருக்கமானவனாக மாறக்கூடுவானென சிறிதும் ஊகித்திருக்கவில்லை. எனக்கு மகள் பிறந்திருக்கிறாளென்கிற செய்தி அறிந்து மலேசியாவின் ஈப்போவிலிருந்து வந்திருந்தான். மாற்று சமூகத்தில் திருமணம் செய்த காரணத்தால் நானும் என் மனைவியும் குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தோம். இந்த பெருநகரத்தில் நண்பர்களை மட்டுமே உறவுகளாகக் கொண்டு வாழ்வைத் துவங்கியபோது அன்றாடத்தை சமாளிக்கவே சவாலாக இருந
லக்ஷ்மி சரவணகுமார்
Feb 24


பாண்டியக் கண்ணனின் மேடை.
“சாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கற்சுவரோ கம்பி வேலியோ அல்ல. சாதி என்பது ஒரு கருத்து நிலை, ஒரு மனநிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பெளதிகத் தன்மையை அழிக்கும் செயல் அல்ல, மக்களின் கருத்து நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்.” - பாபாசாகேப் அம்பேத்கர் பாண்டியக் கண்ணனின் சலவான் எனக்குப் பிடித்தமான நாவல்களில் ஒன்று. பல்வேறு இடங்களில் அந்த நாவலைக் குறித்து குறிப்பிட்டு பேசியிருக்கிறேன். திருமங்கலம் விருதுநகர் பகுதியில் வாழும் குறவர் மக்களின் வாழ்க்கைப்
லக்ஷ்மி சரவணகுமார்
Feb 24


இன்றைய நாவல்கள்: ஒன்று.காடு இழந்த மக்கள், பயம் இழந்த இரவு.
சோழன் வாலறிவன் எழுதியது. ஒரு கிராமத்தை அடக்க துப்பாக்கி தேவையில்லை. ஒரு மனிதனை “ஐயா” என்று அழைக்க ஆரம்பித்தால் போதும். அந்த அழைப்பு மரியாதையால் தொடங்குவதில்லை; பயத்தால் தொடங்குகிறது. பிறகு அது பழக்கமாகிறது. இறுதியில் அது இயற்கையின் சட்டம் போலத் தோற்றம் கொள்கிறது. மனிதன் ஒருவரை மதிக்க ஆரம்பிப்பதற்கு முன் அஞ்சத் தொடங்குகிறான்; அந்த அச்சம் நீண்டு மரியாதை போல முகமூடி மாட்டிக்கொள்கிறது. இந்த நாவலில் நாயகன் ஒருவன் இல்லை. ஒரு சமூகமே நாயகன். பளியர்களின் சமூகமே அந்த நாயகம். அவர்களின்
லக்ஷ்மி சரவணகுமார்
Feb 10
bottom of page