top of page



மேடைக்கு வந்த காகங்கள் - OMNIA
இசையின் எந்த அடிப்படைகளும் தெரியாத தற்குறி நான். ஆனால் ரசனையின் பெயரில் நிறையக் கேட்பதுண்டு. நண்பர்கள் பரிந்துரைப்பதன் வழியாகக் கேட்பது பின் அந்த இசைக்குழுவின் விருப்பமானவர்கள் யாரெனத் தேடிப்பிடித்து அவர்கள் சொல்கிற குழுவையும் கேட்பது. இப்படித்தான் எனக்கு விருப்பமான ஒரு சிறிய வரிசையை வைத்திருக்கிறேன். 2012 ம் வருடம் அப்படி தற்செயலாக கேட்டுப் பிடித்துப்போன இசைக்குழுதான் OMNIA. எனது பழைய முகநூல் கணக்கில் அந்தக் குழுவின் பாடல்களைக் குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். நான் எழுதிய

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 31


ஃபனா
நேற்று பின்னிரவு வேலைகளுக்கு நடுவே நூருல் ஹஸன் என்பவர் எழுதிய நூர் என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். நூர் என்ற சொல்லின் மீது எனக்கு என்றென்றைக்குமான ப்ரேமை உண்டு. என் முதல் காதலியின் பெயர். காதலென்று சொல்லுக்கு பொருளே தெரியாத வயதில் வந்ததாலோ என்னவோ அந்த விருப்பம் அழகானதாகவும் மறக்கமுடியாததாகவும் இருக்கிறது. இந்த நூலில் அந்த இளைஞன் தனது வாழ்வில் எவ்வாறு ஓர் இறை அனுபவத்தை அடைந்தேன் என்பதைப் பதிவு செய்திருக்கிறார். அந்த நூல் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று சொல்ல முடியாத

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 30


பணிக்கர் பேத்தி: ஸர்மிளா செய்யித்
( 2020 ம் வருடம் எழுதிய கட்டுரை. ) ஸர்மிளா செய்யித்தின் உம்மத் வெளியானபோது அதை வாசித்து நான் எழுதியிருக்கிறேன். கிழக்கு இலங்கையின் இஸ்லாமிய வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த நாவல், ஒரு சமூகத்தின் மத அடையாளத்தை மட்டும் பதிவு செய்வதாக இல்லாமல், அந்த சமூகத்துக்குள் வாழும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை, உறவுகள், நம்பிக்கைகள், முரண்பாடுகள், பெண்களின் நிலை, குடும்ப அமைப்பு, நிலத்துடனான உறவு என பல்வேறு அடுக்குகளைத் திறந்துகாட்ட முயன்றது. அந்த நாவலை வாசித்தபோது உருவான எண

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 29


இயக்குனர் ஷங்கருடன் ஒரு உரையாடல்.
1. 2.0 படத்திற்கான கரு எங்கிருந்து, எப்போது உருவானது? ஒவ்வொரு படத்தின் கதைக்குமான ஆரம்பப்புள்ளி எனக்கு சுவாரஸ்யமானது. நாம் தேடிக் கொண்டிருப்பது நம்மைத் தேடிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்களே அப்படித்தான் பல சமயங்களில் கதைகளும் உருவாகின்றன. ஐ படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளின்போது சிலக் காட்சிகள் அவ்வப்போது மனதில் தோன்றி மறைந்த வண்ணமிருந்தன. நெடுஞ்சாலை முழுக்க செல்ஃபோன்கள் ஒரு ஆற்றைப் போல் ஓடும் காட்சி முதலில் மனதில் உதித்தது. அதைத் தொடர்ந்து ஒரு நீச்சல்குளத்தில் அதன் ச

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 29


ஆகூழ் - ஒரு கிராமம் வரலாறு ஆகும் கதை.
ரமா சுரேஷ் தனது முந்தைய நாவலான அம்பரத்திலிருந்து முற்றிலும் துண்டித்துக்கொண்டு புதிய களத்துக்குள் பயணித்திருக்கிறார். கதைமொழியிலும் கதாப்பாத்திர உருவாக்கத்திலும் இந்த நாவல் தனிச்சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறது. கீழ் தஞ்சை மாவட்டமான ஆம்பலாப்பட்டு என்னும் கிராமத்திலிருந்து சிங்கப்பூருக்கு பிழைக்குச் செல்கிறவர்கள் அங்கு ஏகாத்தியபத்யத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுப்பதன் வழியாக அரசியலைக் கற்றுக் கொள்கிறார்கள். இந்த நாவலைப் புரிந்துகொள்ள கணபதியின் அரசியல் வாழ்க்கையை மட்

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 21
bottom of page