top of page



மோகனசாமி: சொல்லப்படாத மனிதர்களின் கதை.
இந்திய சமூகத்தில் பாலியல் குறித்த உரையாடல் பெரும்பாலும் மௌனத்துக்கும் ஒழுக்கத்துக்கும் இடையில் சிக்கிக்கிடக்கிறது. பாலியல் என்பது திருமணம், குடும்பம், குழந்தைப்பேறு ஆகியவற்றுடன் மட்டுமே தொடர்புடையதாகப் பார்க்கப்படும் நிலையில், தனிமனிதனின் ஆசை, உடல், விருப்பம், அடையாளம் ஆகியவை முக்கியமற்றதாகப் பார்க்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக தன்பால் ஈர்ப்பு குறித்து பேசும்போது இந்த மௌனம் இன்னும் அடர்த்தியாகிறது. கன்னட எழுத்தாளர் சுதேந்திராவின் மோகனசாமியை கடந்த வாரம் வாசித்தேன். எத்த

லக்ஷ்மி சரவணகுமார்
Sep 30


நான் இப்போதும் அங்குதான் இருக்கிறேன் - 2
5. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கர்ணனுக்குப் பிணை கிடைத்தது. அவர் நாக்பூருக்குத் திரும்பவில்லை. பல்கலைக் கழகத்தில் அவருக்கு வேலை இல்லை; ஆனால் தேசம் முழுக்க வெவ்வேறு நகரங்களில் அவர் மீது வழக்குகள் இருந்தன; ஒவ்வொரு மாதமும் வழக்குகளுக்காக வெவ்வேறு ஊர்களுக்கு பயணிக்க வேண்டியிருந்தாலும் மலைகளும் தனது ஊருமே தன்னை மீட்கும் என்கிற நம்பிக்கையில் ஊட்டிக்குத் திரும்பியிருந்தார். கவரெட்டியைச் சுற்றிலும் இப்பொழுது கேரட்டும் பீட்ரூட்டும் சமயங்களில் உருளைக்கிழங்கும் விளைவிக்கப்பட்டது. சமவெளி

லக்ஷ்மி சரவணகுமார்
Sep 24


நான் இப்போதும் அங்குதான் இருக்கிறேன்.
வானம் தன் தாய்க்காக அழும்போது, நான் அந்த வானத்தை அதன் தாயிடமே திருப்பிக் கொடுக்கிறேன். திரும்பிச் செல்லும் ஒரு மேகம் என் கண்ணீரைத் தன்னோடு எடுத்துச் செல்லட்டும் என்று நான் அழுகிறேன். விதிகளை மீறுவதற்காக, இரத்தத்தின் முன் நிறுத்தப்படும் ஒரு விசாரணைக்குத் தேவையான அத்தனை சொற்களையும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். அந்தச் சொற்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டு, அவற்றை ஒவ்வொன்றாகப் பிரித்தெறிந்து, அவற்றிலிருந்து ஒரே ஒரு சொல்லை மட்டும் வரைந்து எடுத்திருக்கிறேன்: வீடு. — மஹ்மூத் தர்வீஷ்

லக்ஷ்மி சரவணகுமார்
Sep 24


காதல் - அந்தந்த தருணத்தில் நிகழும் அற்புதம்.
காதலைப் பற்றி நான் நிறைய எழுதியிருக்கிறேன். உடலைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறேன். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் ஈர்ப்பு, காமம், உடல் நெருக்கம், பிரிவு, பொறாமை, துரோகம், நினைவு, தனிமை என்று காதலின் பல அறைகளுக்குள் என் கதாபாத்திரங்களோடு நான் சென்றிருக்கிறேன். ரூஹ் போன்ற ஒரு நாவலை எழுதும்போதுகூட காதல் எனக்கு வெறுமனே ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவது என்ற எளிய விஷயமாக இருந்ததில்லை. அது உடலுக்குள்ளும் உடலுக்கு அப்பாலும், ஆசைக்கும் ஆன்மாவுக்கும் இடையில

லக்ஷ்மி சரவணகுமார்
Sep 22


எங்கிருந்து தொடங்கலாம் ?
ஏன் எழுத வேண்டும்? “எப்படி எழுத வேண்டும்?” என்ற கேள்விக்கு உலகம் முழுக்க ஏராளமான எழுத்தாளர்கள் விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள். ஒரு கதையை எங்கே தொடங்குவது, கதாபாத்திரத்தை எப்படி உருவாக்குவது, ஒரு காட்சியை எவ்வாறு விவரிப்பது, என்று எழுதுவதற்கான முழுமையான இலக்கணம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ( அவற்றை முழுமையாகக் கற்றுக்கொண்டுதான் எழுதவேண்டுமா எனக் கேட்டால், என் பதில் இல்லை என்பதுதான். முதலில் எழுத வேண்டும் அவ்வளவுதான். ) ஆனால் எழுத விரும்பும் ஒருவர் அடிப்படைகளைக் கற்றுக்கொள்

லக்ஷ்மி சரவணகுமார்
Sep 19


நேத்ராவதி
கதைகள் எங்கிருந்து பிறக்கின்றன என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஒரு மனிதனின் முகத்திலிருந்து, அல்லது பழைய நினைவிலிருந்து, ஏதேனுமொரு நிலப்பரப்பிலிருந்து, யாரும் கவனிக்காத ஒரு சம்பவத்திலிருந்து அவை பிறக்கலாம். சில சமயங்களில் நம்மால் மறந்துவிட்டதாக நினைத்த ஒன்றுதான், பல வருடங்களுக்குப் பிறகு கதையாக நம்மிடம் திரும்பி வருகிறது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளும் அப்படி உருவானவைதான். வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு நிலப்பரப்புகளிலும் பயணிக்கும் இக்கதைகளுக்குள், மனிதனின் தனிமை

லக்ஷ்மி சரவணகுமார்
Sep 12


எங்கிருந்து துவங்கலாம்?
எழுத வேண்டும் என்கிற எண்ணம் பல நேரங்களில் சிறிய அனுபவத்திலிருந்தே பிறக்கிறது; ஆனால் அந்த எண்ணத்தை எழுத்தாக மாற்றும் தருணத்தில் நம்மைத் தயக்கம் சூழ்ந்துவிடுகிறது. கதை எங்கிருக்கிறது என்பதைவிட, அதை எப்படித் தொடங்குவது என்பதே பெரிய கேள்வியாகிறது. எதை எழுதுவது?எப்படி எழுதுவது?கதை எங்கிருந்து தொடங்கும்?ஒரு கதாப்பாத்திரத்தை எப்படி உருவாக்குவது?நமக்குத் தோன்றுவது உண்மையிலேயே கதையா?நாம் எழுதுவது இலக்கியமாகுமா? இப்படியான கேள்விகளோடு பலர் எழுதுவதற்கு முன்பாகவே நின்றுவிடுகிறார்கள். இந்

லக்ஷ்மி சரவணகுமார்
Sep 12
bottom of page