top of page



நினைவில் காடுள்ள மிருகம் - 5
கடநாட்டுக்கு மேலே, தேயிலைத் தோட்டங்களின் நடுவே நாற்பது ஏக்கர் நிலத்தில் சக்திவேலின் ‘ஹில் வியூ’ ரிசார்ட் பிரம்மாண்டமாக எழுந்துகொண்டிருந்தது. கட்டுமானப் பணிகள் முக்கால்வாசி முடிந்திருந்த அந்த இடத்தைத் தனது நண்பர்களுக்குச் சுற்றிக்காட்டிக்கொண்டிருந்தான். மலைமுகட்டில் எழுந்திருந்த கட்டடத்தையும், அதன் முன்பாகத் திறந்துகிடந்த பள்ளத்தாக்கையும் பார்த்த நண்பர்கள் வியப்புடன் நின்றனர். தொலைவில் காட்டுமாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. கட்டடத்தின் கீழே பழைய வயல்வரப்புகள் இன்னும் சில இடங்களில

லக்ஷ்மி சரவணகுமார்
3 days ago


நினைவில் காடுள்ள மிருகம் - 4
தேவகி சில நாட்களாகச் சக்திவேலைத் தவிர்த்தாள். வயலில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ளாமல் கூட்டத்தில் ஒளிந்துகொள்ளப் பழகியதோடு அவன் வீடிருக்கும் பாதையில் வேலைக்குச் செல்வதையும் நிறுத்தினாள். லாரிகள் நிற்கும் இடத்தின் பக்கமாக தனது நிழல்கூட விழாதபடி பார்த்துக்கொண்டவள் மாலை வேலை முடிந்ததும் மற்ற பெண்களுடன் சேர்ந்து வீடு திரும்பினாள். து அவளது நடவடிக்கைகளில் இருந்த மாற்றங்களை மற்றபெண்கள் கவனிக்காதபோது மங்கலி கவனித்திருந்தாள். ஒருநாள் கேரட் கழுவும் இடத்தில் தனக்கு அருகில் நின்றிருந்த

லக்ஷ்மி சரவணகுமார்
4 days ago


நினைவில் காடுள்ள மிருகம் -3
சின்னக்குன்னூரில் மழை பெய்த மறுநாள் மலைகளில் பசுமை அடர்ந்திருந்தது. முந்தைய நாள் வரை மண்ணை மூடியிருந்த தூசி கழுவப்பட்டு கற்களின் மேல் நீர் வழிந்துகொண்டிருக்க, சாலையின் ஓரங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் யூகலிப்டஸ் இலைகள் மிதந்தன. தேயிலைத் தோட்டங்களின் சரிவுகளில் சிறிய நீர்த்தாரைகள் உருவாகி, கீழே பள்ளத்தாக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்க கேரட் வயல்களில் மண் கருமையாகி காலடியில் ஒட்டியது. மண் ஈரமாக இருக்கும்போது கேரட்டைப் பிடுங்குவது எளிது. ஈரம் அதிகமாகிவிட்டால், மண்ணிலிருந்து வெளிய

லக்ஷ்மி சரவணகுமார்
5 days ago


நினைவில் காடுள்ள மிருகம் - 2
அந்தக் கிராமத்தின் பெயரை அரசு அதிகாரிகள் ஒருபோதும் சரியாக உச்சரித்ததில்லை. வரைபடத்தில் அது ஒரு சிறிய புள்ளி; மாவட்ட அலுவலகத்தில் ஓர் எண். காவல்துறையின் பதிவேட்டில் ஒரு பெயர், தேர்தல் பட்டியலில் இன்னொரு பெயர். ஆனால் அங்கே பிறந்து வளர்ந்தவர்களுக்கு ஊரின் பெயரைச் சொல்லும்போதே அதன் பின்னால் இருந்த மலை, ஆறு, சால் மரங்கள், மகுவா மலர்களின் வாசனை, மழைக்குப் பிறகு கால்களில் ஒட்டிக்கொள்ளும் சிவப்பு மண் எல்லாம் நினைவுக்கு வந்துவிடும். மதனுக்கு அந்தப் பெயரை நினைக்கும்போது முதலில் நினைவுக

லக்ஷ்மி சரவணகுமார்
6 days ago


நினைவில் காடுள்ள மிருகம் - 1
சின்னக்குன்னூரில் மலை தன் உடலின் வெப்பத்தை மெதுவாக இழக்கத் தொடங்கும்போதுதான் இரவு இறங்குகிறது. மாலை ஆறு மணிக்குப் பிறகு சாலையில் நடப்பவர்கள் குளிரிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளக் கைகளை மார்போடு இறுக்கிக் கொள்வார்கள். ஏழு மணிக்குள் தேயிலைத் தோட்டங்களின் பச்சை கருமைக்குள் மறைந்துவிடும். எட்டு மணிக்குப் பிறகு மலைச்சரிவுகளில் சிதறிக் கிடக்கும் வீடுகளின் மின்விளக்குகள் இருளுக்குள் சிறிய கண்களைப்போல் ஒளிரும். அதற்குப் பிறகு பனி சூழத் தொடங்கும். பகலில் சாலையோரம் நின்று பார்த்தால்

லக்ஷ்மி சரவணகுமார்
Oct 9


விழிப்புடன் இருத்தல்
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, கவனிக்கத் தொடங்க வேண்டும். இந்த இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. வாழ்க்கை எங்கே செல்கிறது என்று பார்த்துக்கொண்டிருப்பது வேறு; நாம் எங்கே செல்கிறோம் என்பதை கவனிப்பது வேறு. கடந்த வருடம் வரையிலும் நான் இந்த இரண்டாவது நிலையில் இல்லை. வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது; நானும் அதனோடு நடந்துகொண்டிருந்தேன். அந்த நிமிடத்து மகிழ்ச்சி, துக்கம், கோபம், சண்டை, உறவுகள், எதிர்பார்ப்புகள் என்று அந்தந

லக்ஷ்மி சரவணகுமார்
Oct 4


தூய்மைவாதத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் அதிகாரம்.
எழுத்தாளர் குணா கந்தசாமியின் முகநூல் பக்கத்தின் வழியாக ரசமட்டம் என்றொரு இணைய இதழ் இருப்பதை அறிந்துகொண்டேன். அதில் நான் மதிக்கும் ராணி திலக் எழுதிய கட்டுரையை வாசித்தபோது அவரது கருத்துகள் எதனோடும் என்னால் உடன்படமுடியவில்லை. சில மாதங்களுக்கு முன்னால் யூ ட்யூபில் வாண்டையார் என்பவரின் காணொளியைக் காண முடிந்தது. அதில் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார். என்னால மெட்ராஸ் பக்கமோ இல்ல என் சொந்த ஊர விட்டு வேற நகரத்துக்கோ போக முடியாது, எனக்கு அது ஒத்துவராது என... அந்த வார்த்தைகளுக்குப் பின்ன

லக்ஷ்மி சரவணகுமார்
Oct 3
bottom of page